தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கிறார் மைத்திரி! – வடக்கு மாகாணசபையில் குற்றச்சாட்டு

தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வு­டன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன எமது மக்­க­ளைக் கைவிட்­டுள்­ளார். அவ­ரி­டம் இருந்து நாம் எதை­யு­ம் பெற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின்.

வடக்கு மாகாண சபை­யின் 125ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் நில ஆக்­கி­ர­மிப்­புத் தொடர்­பான பிரே­ரணை ஒன்­றைக் கொண்டு வந்­தார். அதன்­மீ­தான விவா­தத்­தின்­போதே அஸ்­மின் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘ வன­ஜீ­வ­ரா­சி­கள் அமைச்சு அல்­லது திணைக்­க­ளம் வடக்கு மாகா­ணத்தை மட்­டும் குறி­வைப்­பது ஏன்?. ஏனைய மாகா­ணங்­க­ளில் சிறு காணி­களே ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. வடக்­கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான காணி­கள் அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. தமிழ் மக்­க­ளின் நிலங்­களை மட்­டும் குறி­வைத்து வன­ஜீ­வ­ரா­சி­கள் அமைச்சு பற­வை­கள் சர­ணா­ல­யத்­தைப் பிர­க­ன­ட­னப்­ப­டுத்­து­கின்­றது.

கேகாலை மாவட்­டத்­தில் மின் இணைப்பு உற்­பத்தி நிலை­யம் ஒன்றை அமைப்­ப­தற்­காக அர­சால் தனி­யா­ரி­டம் காணி­கள் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டன. வடக்கு மாக­ணத்­தின் வவு­னியா மாவட்­டத்­தில் அவர்­க­ளுக்­குப் பதில் காணியை வழங்­கி­யுள்­ள­னர். இவர்­க­ளுக்­கும் வவு­னி­யா­வுக்­கும் என்ன சம்­பந்­தம்?, அவர்­க­ளுக்கு எவ்­வாறு அரசு இங்கு காணி வழங்க முடி­யும்?.

தமி­ழ­ரின் காணி­களை அப­க­ரிக்­கும் அரசு திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களை செய்ய இவ்­வா­றான உபா­யங்­களை மேற்­கொள்­ளு­கின்­றது. இது தற்­போ­தைய ஆட்­சி­யில் நடக்­கின்­றது. தமிழ் மக்­கள் யாரை நம்பி அரச தலை­வ­ராக்­கி­னார்­களோ அவரே மக்­க­ளின் நிலத்தை அப­க­ரித்து திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றத்­துக்­குத் துணை போகின்­றார்.

மைத்­தி­ரி­யும் தமி­ழர்­க­ளுக்கு துரோ­கம் இளைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றார். அவரை நம்பி எமக்கு எந்த தீர்­வும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!