புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு!

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படலாம் என்றும், கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பொதுவாக ஆகஸ்ட் மாதத்திலேயே இடம்பெறுகிறது. அத்துடன் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதத்தில் இடம்பெறுகிறது. என்றாலும் இந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம்.

அத்துடன் இதுதொடர்பாக கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருகிறோம். இதன்போது இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே பரீட்சைகள் இடம்பெறும் நேரசூசியை அறிவிக்க முடியும்.

குறித்த பரீட்சைகளை உரிய நேரசூசியின் பிரகாரம் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு முடியுமாக இருக்கின்ற போதும், கொரோனா தொற்று நிலைமையினால் கற்றல் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காதமை காரணமாக, சில மாதங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கே நினைத்திருக்கிறோம்.

அதன் பிரகாரம் உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நவம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து இருக்கிறோம். என்றாலும் இதுதொடர்பான இறுதித் தீர்மானத்தை கல்வி அமைச்சே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!