டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனேடிய யூடியூபர்!

கனடாவைச் சேர்ந்த யூடியூப்பர் லில்லி சிங் அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் மாஸ்க் அணிந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த வருடம் கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலகம் முழுவதும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றன. இதுவரை நடந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் போராட்டக்களத்தில் உயிரிழந்தனர்.

முன்னதாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட கருத்து இணையத்தில் பேசு பொருள் ஆனது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கனடாவைச் சேர்ந்த யூடியூபர் லில்லி சிங் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முககவசம் ஒன்றை அணிந்திருந்தார். அந்த முகக்கவசத்தில் ‘நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!