ஜேர்மனியை எச்சரித்த பிரபல சுகாதார நிறுவனம்!

ஜேர்மனியில் கொரோனாவின் மற்றொரு பெரிய அலை துவங்குவதால், ஏப்ரல் மாத நடுப்பகுதி வாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா அதிகரிக்கும் என ஜேர்மனியின் சுகாதார நிறுவனமான Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 23 நிலவரப்படி, ஒரு வாரத்துக்கு 100,000 பேருக்கு 214 பேருக்கு கொரோனா புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 12 வாக்கில் அந்த எண்ணிக்கை 100,000 பேருக்கு 350 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைய கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்தான் காரணமாக இருக்கும் நிலையில், ஜேர்மனியிலுள்ள 50 சதவிகிதம் கொரோனா வைரஸும் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்தான் என தெரியவந்துள்ளது.

அவ்வகை வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியதும், முந்தைய வைரஸைவிட பயங்கரமானதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் சரியாக 12 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாவது தெரியவந்துள்ளதாகவும் Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதை வைத்து பார்க்கும்போது, ஏப்ரல் நடுப்பகுதி வாக்கில், ஒரு வாரத்துக்கு 100,000 பேருக்கு 500 பேருக்கு கொரோனா புதிதாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இன்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 6,604 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது. 47 பேர் பலியாகியுள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!