உருமாறிய புதிய கொரோனாவால் 400 பேர் பாதிப்பு!

Coronavirus threat: Staff of CT Institutions sanitising the school buses and labs in the wake of COVID-19 threat in Jalandhar. express photo
கொரோனா 2-வது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலை உருவாதற்கு நாம் தான் காரணம். இந்தியாவில் கொரோனா இல்லை என நினைத்து விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்தில் இருந்து சொந்த நாடு திரும்பிய பயணிகளால், அந்தந்த நாடுகளில் இந்த தொற்று தடம் பதித்தது தெரியவந்தது. இந்த வரிசையில் இந்தியாவிலும் இந்த தொற்று எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!