Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்திய இந்தியா

Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் தடுப்பூசியானது உள்நாட்டு பயன்பாட்டிற்கு அவசியம் என்பதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியினை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் வரையில் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, Covax திட்டத்தின் கீழ் சுமார் 190 நாடுகள் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!