சிங்கப்பூரில் போலீசாரை ஆபத்தான முறையில் அணுகிய இந்தியருக்கு நேர்ந்த கதி!

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காமல் தனது முககவசத்தை அகற்றி, போலீஸ்காரரை நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளும் பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக பொது இடத்தில் மது அருந்தியது, வாகனம் ஓட்ட தடை இருந்தபோதும் மோட்டார் சைக்கிள் ஓட்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!