டில்லியில் உச்சம் தொட்ட வெப்பநிலை!

டில்லியில், 76 ஆண்டுகளுக்குப் பின், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக நேற்று, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. டில்லியில், நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு நடுவே, மிக கடுமையான வெப்பம் நிலவியது.நேற்று டில்லியில் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலை, 40.1 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது.

இது, வழக்கமான வெப்பநிலையை விட, 8 டிகிரி செல்ஷியஸ் அதிகம்.இதற்கு முன், 1945ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில், 76 ஆண்டு களுக்கு பின், மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக, வானம் மேக மூட்டமின்றி இருந்தது, காற்றின் வேகம் குறைந்தது உள்ளிட்டவை, வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக இருந்ததாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.வெப்பநிலை உயர்வின் காரணமாக, டில்லி முழுதும் கடும் அனல் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!