தேர்தல் ஆணையத்திற்கு சவால்: நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம்!

வாக்காளர்களுக்கு நேரடியாக சென்று பணம் கொடுத்தால் அதிகாரிகள் சுற்றி வளைப்பதால் Gpay உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பட்டுவடா நடக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்துவருகிறது.

தற்போது பணப்பட்டுவாடா செய்தால் மக்களும், எதிர்க்கட்சியினரும் அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பணப்பட்டுவாடா செய்து என்பது மிகவும் சலாலான ஒன்றாக உள்ளது. எனினும் பணப்பட்டுவாடாவுக்கு புதிய முறைகளை கண்டுபிடித்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.

வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரித்து, கூகுள்-பே மற்றும் ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதை சில கட்சியினர் தொடங்கியுள்ளனர். இணையதளம், பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய அதிமுக கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டத்தில் இந்த முறையை அதிகம் பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்யும் முயற்சி நடப்பதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சந்தேகத்திற்குரிய வகையில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நடக்கும் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியின் உதவியுடன் அதிகாரிகள் கண்காணித்துவருவதாக பதில் அளித்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்ற பரிவர்த்தனைகள் குறித்த தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாகு தெரிவித்துள்ளர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக கட்சியினர் மறுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!