யாழ்ப்பாணத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் நேற்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர புதிய சந்தை தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 756 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 321 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியைச் சேர்ந்தவர். ஏனைய 3 பேரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள். உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரி, இவருக்கு எழுமாற்றாக மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. ஏனைய ஒருவர் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்படவர்கள். மேலும் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!