பொதுமக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாள் ஒன்று பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ நெருங்கியுள்ளது.

இதனால், கடந்த 10ம் தேதி திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள், வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை, திருமண நிகழச்சியில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்து அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில், கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு 10 நபர்களுக்கும் மேல் அனுமதி கிடையாது. கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முக்கிய பூஜைகளில் அந்தந்த கோயில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!