துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஐதேக மனு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.

குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரம் இலங்கையின் பிரதேசசபை மற்றும் நகரசபைக்கு உட்படாமல் இலங்கையின் ஜனாதிபதி அமைக்கவுள்ள ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.

இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட நீதி மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளமையால், போர்ட் சிட்டி எதிர்காலத்தில் சீனாவின் குடியிருப்பு பகுதியாக மாறிவிடும் என்று ஜேவிபி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!