ஊதியத்துடன் கூடிய விடுமுறை: உற்சாகத்தில் அரசு ஊழியர்கள்!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாட்கள் எந்த விதமான சம்பளம் பிடித்தமும் இல்லாமல் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று இரண்டாவது பரவலைத் தடுத்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், இது கட்டாயம் என்றும் அரசு போக்குவரத்து கழக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டும் தொற்று ஏற்படாமல் நலம் அடையும் வரை சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!