கோவிட்-19: ஒரே நாளில் 315,802 பேர் பாதிப்பு – 2,102 பேர் பலி!

இன்றைய (வியாழக்கிழமை) அறிக்கையின் படி, நாட்டில் 315,802 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவிவரும் மோசமான சுகாதார செயல்பாடுகளுக்கு இடையே, இந்தியாவில் ஒரே நாளில் 2,102 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 184,672 ஆக உள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்புகளின் உயர்வு இரண்டாவது அலைகளில் அதிவேகமானது. மகாராஷ்டிரா (Maharashtra) அரசு புதன்கிழமை இரவு, மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் ஸ்பைக்கை எதிர்த்துப் போராடுவதற்கு “பிரேக் தி செயின்” (Break the Chain) என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்த விதிகள் இன்றிரவு முதல் மே 1 காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் 67,468 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளன. மேலும் 568 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 24,638 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன. அங்கு 249 பேர் இறந்துள்ளனர்.

தேசிய தலைநகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சப்ளை குறைந்துள்ளதால், மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நேற்று பதிவு செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். மருத்துவமனைகளின் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

மகாராஷ்டிராவின் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக் கசிவு காரணமாக 24 பேர் உயிர் இழந்த சம்பவம் குறித்தும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் மகாராஷ்டிரா (4,027,827), கேரளா (1,197,301), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), மற்றும் ஆந்திரா (942,135) ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!