மியன்மாரில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று நாட்டுக்கு வருகை

மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த 12 இலங்கை மீனவர்களும் இன்று நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மார் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுகட்ட கலந்துரையாடலின் பின்னர் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மீனவர்கள் சிங்கப்பூர் எயார்லைன்ஸுற்குச் சொந்தமான விமானம் ஊடாக மியன்மாரில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டுக்கு அழைத்துவரப்படும் மீனவர்கள் அனைவரும் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!