ஓராண்டு கால தடைக்கு பின் அமெரிக்க பயணிகளை அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

முழுமையான தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இந்த கோடையில் ஐரோப்பாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். நீண்ட ஓராண்டு கால தடைக்கு பின்னர் அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள்.

ஜோ பைடன் அரசாங்கத்தின் துரித நடவடிக்கையால் அமெரிக்காவில் தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மொத்தமாக இதுவரை 229 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.75 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்கர்களில் சுமார் 140 மில்லியன் மக்கள் தங்களின் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றுக் கொண்டுள்ளனர்.

மொத்தமாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட அமெரிக்க மக்களின் எண்ணிக்கை 94.8 மில்லியன் என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே ஐரோப்பியாவின் 27 நாடுகளிலும், முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட எவருக்கும் சென்று திரும்பலாம் என முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அறிவித்துள்ளார்.

கணிக்க முடியாத அளவுக்கு அமெரிக்காவில் முன்னேற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அதே நிலை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா மேற்கொள்வதில் தடை செய்தார், ஜோ பைடன் ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகும் அந்த தடை உத்தரவானது நீடித்தது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி முழுமையாக எடுத்துக் கொண்டவர்களுக்கு தடையை நீக்கியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யுமா என்பதில் உறுதியான முடிவு வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!