ஞானசார தேரரை கொல்ல ஆயுததாரிகள் ஊடுவல்?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக, வெளிநாட்டில் இயங்கி வரும் அடிப்படைவாத இயக்கமொன்றின் அடிப்படைவாத ஆயுததாரிகள் சிலர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவல்களை அடுத்து தனது பாதுகாப்புக் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு ஞானசார தேரருக்குப் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!