தேவைப்பட்டால் நாடு முடக்கப்படும்!!

எதிர்காலத்தில் நாட்டில் கொரோனா நிலைமை மற்றும் தேவைகளைப் பொறுத்து நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

சில பகுதிகளை தனிமைப்படுத்தும் நிலை அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மாறாக தொற்றுநோயியல் ஆய்வுகளின் மூலம் மட்டுமே இவை முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் தேவையின்றி விதிக்கப்பட்ட தனிமை நிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

சந்தேகத்திற்குரிய கிராம சேவகர் பிரிவுகளை தனிமையில் வைப்பதற்கான அதிகாரம் சுகாதார சேவைகளின் மாகாண இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், இது குறித்து சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!