கடவுச்சீட்டு தட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்குள் தீரும்!

அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளுக்கு நிலவி வரும் பற்றாக்குறை இரண்டு மாதங்களில் நீக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது உள்துறை மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் 10 இலட்சம் கடவுச் சீட்டுகளை புதிதாக பெற்றுக் கொள்வதற்கான கேள்வி மனு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கமைவாக வெளிநாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த கடவுச்சீட்டுக்கள் கிடைக்கும் வரையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்கள் அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!