பயணக் கட்டுப்பாடுகள் சட்டத்துக்கு முரணானது!

ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமல், மூன்று நாட்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடாகும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சட்டத்துக்கு புறம்பாக விதிக்கப்பட்டுள்ள இப்பயண கட்டுப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தால், விதிக்கப்பட்டுள்ள சகல பயணக்கட்டுபாட்டுகளையும் அரசாங்கம் மீளப்பெறவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

“1947இல் நிறைவேற்றப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவால் மாத்திரமே பொதுமக்களின் பயணக் கட்டுபாடுகளை கட்டுப்படுத்தலாம்” என்றார்.

எனினும், 1932ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட இராசதானிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கு அமையவே, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தால் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!