வீடுகளில் சிகிச்சையால் சிக்கல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்களை, அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தால், பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாத தொற்றாளர்களை, அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குரிய அடிப்படை வசதிகள் வீடுகளில் காணப்படாமையால், இவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!