அரச பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி – அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது

அரச பணியாளர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது

அரச பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக பொது சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உளளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் 1.4 மில்லியன் அரச பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக பொது சேவைகளின் முக்கியத்துவம் மேலும் உணரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே இவ்வாறான சூழ்நிலையில் அரச பணியாளர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!