கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படவில்லை

கர்ப்பிணிப்பெண்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு நாட்டிலும் பரிந்துரைக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்

கர்ப்பிணிப்பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

‘கொரோனா வைரஸ் எவருக்கும் ஏற்படக்கூடும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் எளிதில் தொற்று பரவலடையும். உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை கர்ப்பிணிப்பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. கர்ப்பிணிப்பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பில் சோதனை நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

எனவே கர்ப்பிணிப்பெண்களின் நலன் தொடர்பில் வீடுகளில் உள்ள அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோயாளர்கள் புற்றுநோயாளர்கள் சிறுநீரக நோயாளர்கள் போன்றவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகும். இவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.’ என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!