மீண்டும் பயணத்தடை வரலாம்! – எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி.

நாட்டில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகள் என்பவற்றை பின்பற்றி செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடரும். மக்களின் நலனை கருத்திற் கொண்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. தினசரி 2,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையிலேயே பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!