உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை!

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே காணப்பட்டது. மக்களின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இன மற்றும் மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து ஏனையோருக்கு பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு, உரப்பற்றாக்குறை, கொவிட் பரவல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ள நிலையில் , நேற்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!