காலி தடுப்பூசி விவகாரம் – விசாரணையில் வெளியான தகவல்

இலங்கையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த 425 பேர் ஜூன் 5 மற்றும் 7 திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி காலிக்கு சென்று கோவிஷீல்ட் இரண்டாவது அளவைப் பெற்றிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுகாதார சேவை அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த திகதிகளில் மொத்தம் 632 பேர் காலியில் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றுள்ளனர்.அதில் 425 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னரே விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி காலிக்குச் சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் பதவியிலிருந்த இருவர் கடந்த தினம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!