ஆஸ்திரியாவில் அழகை மேம்படுத்த இளம்பெண் செய்த செயல்: விமர்சிக்கும் இணையவாசிகள்!

இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பக மற்றும் அழகு சிகிச்சைக்காக, ஒரு பிராட்ஸ் பொம்பை போல் தோற்றமளிக்க சுமார் முப்பதாயிரம் பவுண்ட் வரை செலவிட்டு வருகிறார். ஆஸ்திரியாவின் Vienna-வை சேர்ந்த Jessica Bunnington என்ற 20 வயது இளம் பெண், தன்னுடைய 18 வயதில், தான் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் வைத்து முதன் முதலில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சைக்காக செலவு செய்தார்.

இதுவரை இரண்டு மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள இவர், மூன்றாவது திட்டமும் உள்ளதாக கூறுகிறார். ஏனெனில், அவர் நான் ஒரு Bratz doll பொம்பைப் போன்று இருக்க வேண்டும், எதிர்காலத்தில் இன்னும் அதிக அறுவை சிகிச்சைகள் செய்ய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தோற்றத்தை முற்றிலும் விரும்புகிறேன். இதுவரை எனக்கு இரண்டு மார்பக அறுவை சிகிச்சைகள் செய்துள்ளேன்.

நான் இயற்கையாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு செயற்கை பொம்மை போல இருக்க விரும்புகிறேன், குறிப்பாக Bratz doll பொம்மை போல் இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றின் உதடுகள் பெரிதாகவும் அழகாகவும் இருக்கும். எனக்கு உதடு மிகவும் பிடிக்கும், அதை பெரிதாகக்க விரும்புகிறேன்,

அதற்கு தேவையான அனைத்தும் செய்து வருகிறேன். இப்படி செய்வதால், என்னை சிலர் நான் பைத்தியம் என்று நினைக்கிறார்கள், ஆனால், அவர்களிடம் நான் மிகவும் இயற்கைக்கு மாறானவர் என்று கூறுகிறார்,

இவரின் இந்த மார்பக அறுவை சிகிச்சைக்கு ஆரம்பகட்டத்தில் இவரின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை, அதன் பின் சமாதானப்படுத்தி அனுமதி வாங்கியுள்ளார்.

இருப்பினும் தொடர் அவர் இதில் தீவிரமாகியதால், குடும்பத்தினரை விட்டு இவர் பிரிந்துவிட்டார். இவர் இளமையாக இருந்த போது பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

எந்த ஒரு மேக்கப்பும் போட இவருடைய பெற்றோர் அனுமதிப்பதில்லை, அது இவருக்கு காலப்போக்கில் வெட்கமாக இருந்துள்ளது. மேக்கப் போடாமல் இவர் தான் அழகாக இல்லையே என்ற ஏக்கமும் இருந்துள்ளது.

பிற பெண்களைப் பார்க்கும் போது, அவர்கள் அழகாக தெரிந்துள்ளனர். அதன் பின்னரே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவர் சுமார் 30000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளார். இன்னும் அழகிற்காக தொடர்ந்து என்னவெல்லாம் செய்யனுமோ அதை எல்லாம் செய்வேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!