இன்றைய தினம் இடம்பெறவுள்ள சஜித் அணியின் அவசர கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

அவசரமாக இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த விசேட கூட்டத்தில் அவசரமான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!