அமெரிக்காவில் பணிப்பெண்ணின் துணிச்சலால் தடுக்கப்பட்ட பேராபத்து!

அமெரிக்காவின் டென்வர் நகரில் ஹொட்டல் பணிப்பெண் ஒருவரின் துணிச்சலான செயலால், மொத்த நாட்டு மக்களையும் நடுங்க வைத்திருக்க வேண்டிய கொடுஞ்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகராம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக டென்வர் நகரின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டென்வர் நகரில் அமைந்துள்ள மேவன் ஹோட்டலில் இருந்து பொலிசாருக்கு ரகசிய தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில், ஹொட்டலின் 8-வது மாடியில் உள்ள அறையில் ஒரு டசினுக்கும் அதிகமாக ஆயுதங்களும் 1,000 சுற்றுக்கு தேவையான துப்பாக்கி தோட்டாக்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பணிப்பெண் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஹொட்டலுக்கு விரைந்த பொலிசார், 16 துப்பாக்கிகளையும் கவச உடைகளையும், தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஹொட்டல் அமைந்துள்ள பகுதியின் மிக அருகாமையிலேயே MLB All-Star விளையாட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் MLB All-Star விளையாட்டை அவர்கள் குறிவைத்திருக்க வாய்ப்பில்லை என்றே பொலிசார் நம்புகின்றனர்.

நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் MLB All-Star விளையாட்டை கண்டுகளிக்க டென்வரில் குவிந்துள்ளனர். இந்த ரசிகர்கள் கூட்டமாக இருக்கலாம் தாக்குதலுக்கான இலக்கு என்றே பொலிசார் நம்புகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!