தனிமைப்படுத்தவர்களை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி மனுக்கள் தாக்கல்!

கைது செய்யப்பட்ட 15 தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் இடைக்கால உத்தரவைக் கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன 15 ஆட்கொணர்வு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

இந்த மனுக்களில், காவல்துறை அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக யோசனைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 8 ஆம் திகதி பத்தரமுல்ல சந்தியில் கூடியிருந்தனர்.

முற்பகல் 11 மணியளவில், ஒரு குழுவினர் எதிர்ப்பாளர்களைக் கலைக்க அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தினர் மற்றும் சுமார் 30 பேரை கைது செய்தனர். கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் சுகாதார அதிகாரிகள் அல்லது என்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை எதுவும் இல்லாமல் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்ப நீதிமன்றிடம் காவல்துறை கோரிய போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்ததாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!