உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய கியூபா மக்கள்!

கியூபாவில் உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு தேசிய அளவில் நிலவியதைத் தொடர்ந்து தற்போது அங்கு சுங்கவரி நீக்கப்பட்டது. பொருளாதாரச் சரிவு, உணவுப் பற்றாக்குறை, கரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உணவு, மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கியூபாவில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தன. அமெரிக்காவும், நாங்கள் கியூபாவின் மக்கள் பக்கம் நிற்பதாகத் தெரிவித்தது.

ஐ.நா.சபையும் பொதுமக்கள் குரல்களுக்கு மதிப்பளியுங்கள் என்று தெரிவித்தது. இந்நிலையில் நெருக்கடியை தீர்க்க சர்வதேச எல்லைகளை கியூபா திறந்து விட்டுள்ளது.

அதாவது உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.

அங்கே யார் வேண்டுமானாலும் உணவு, மருந்து பொருட்களை கொண்டு வரலாம், அதற்கு வரியோ சோதனையோ கிடையாது என்று அறிவித்துள்ளது கியூபா அரசு.

கியூபா அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!