நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்கும்!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமென பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தால், சர்வதேச ரீதியில் இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகிறது. இச்சட்டத்தைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும், சித்தரவதை செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது.

தமிழ் மக்கள் எப்படி காணாமலாக்கப்பட்டார்களோ அதேபோல தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே நாட்டு மக்களால் காணாமலாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!