18 ஆண்டுகளாக மூச்சு திணறலால் அவதிப்பட்ட நபர்: பரிசோதனையும்போது காத்திருந்த பேரதிர்ச்சி!

கடந்த 18 ஆண்டுகளாக இருமல் மட்டும் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த, வாலிபரின் நுரையீரலில் இருந்து பேனா மூடியை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (32). இவருக்கு பல ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததுள்ளது. அதுமட்டுமின்றி, இருமலாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோயில் இருந்து பூரண குணமடையவில்லை. இந்நிலையில், கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய அளவில் பேனா மூடி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த பொருளை அகற்ற, சூரஜிக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்தனர். இதன்பின்பு, நுரையீரல் சிறப்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் இதயநோய் நிபுணர்கள் அவருக்கு ஆபரேசன் செய்து அகற்றியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!