முகக்கவசம் அணியாவிட்டால் கிரிமினல் குற்றமாக கருதப்பட வேண்டும்: லண்டன் மேயர் வலியுறுத்தல்!

இனி சுரங்க ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வரும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தி வருகிறார் லண்டன் மேயர்.

பிரித்தானியாவில், ஜூலை 19 அன்று கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரயில்கள் அல்லது பேருந்துகளில் பயணிப்போர் மாஸ்க் அணிவது கட்டாயம் என கூறப்பட்டது. ஆனால், அப்படி மாஸ்க் அணிய மறுப்போர் ரயில்கள் அல்லது பேருந்துகளிலிருந்து இறங்குமாறு கோரப்பட்டார்களேயொழிய, அவர்கள் தண்டிக்கப்படவில்லை, அதாவது அபராதம் கூட விதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இனி லண்டன் சுரங்க ரயில்களில் மாஸ்க் அணியாமல் பயணிப்பது கிரிமினல் குற்றமாக கருதப்படும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருமாறு, அரசை லண்டன் மேயர் சாதிக் கான் வற்புறுத்திவருகிறார்.

அப்படி மாஸ்க் அணியாமல் ரயில்களில் பயணிப்பது சட்டப்படி குற்றமாக கருதப்படும் நிலையில், மாஸ்க் அணிய மறுப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்கிறார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!