அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த ஆராய அமைச்சரவை குழு நியமனம்

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை குறித்த ஆராய, ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர்களான பெஷில் ராஜபக்‌ஷ, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்பிக்குமாறு குறித்த குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், ஒட்மொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் அனைத்து ஆசியர் மற்றும் அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!