பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நிதியுதவி!

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 15 முன்னாள் போராளிகளுக்கு சுய வேலைவாய்ப்பைத் தொடங்க நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஒ்வவொருவருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதி,

“வன்முறையிலிருந்து விலகியிருப்பதை உலகிற்கு நிரூபிக்கவும், இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் மற்றும் மரியாதைக்குரிய குடிமக்களாக அமைதியான வாழ்க்கையை வாழ முன்னாள் போராளிகள் தயாராக இருப்பதாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!