நிறைவான கிராம திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 700 இற்கு மேற்பட்ட திட்டங்கள் நிறைவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறைவான கிராம திட்டத்தின் கீழ் சுமார் 864 மில்லியன் ரூபா செலவில் 793 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

இதன்படி, யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்ட திட்டங்களே தற்போது நிறைவு செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 5 திட்டங்களுக்காக சுமார் 11 மில்லியன் நிதி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 40 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் ரூபா நிதியும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் ரூபா நிதியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 18 திட்டங்களுக்காக சுமார் 29 மில்லியன் ரூபா நிதியும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 54 திட்டங்களுக்காக 79 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டுள்ளதாக, அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 14 திட்டங்களுக்காக சுமார் 17 மில்லியன் ரூபா நிதியும் ,யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 33 திட்டங்களுக்காக சுமார் 55 மில்லியன் ரூபா நிதியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 49 மில்லியன் ரூபா நிதியும், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 37 திட்டங்களுக்காக சுமார் 59 மில்லியன் ரூபா நிதியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 66 திட்டங்களுக்காக சுமார் 89 மில்லியன் ரூபா நிதியும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 52 திட்டங்களுக்காக சுமார் 61 மில்லியன் ரூபா நிதியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 80 திட்டங்களுக்காக சுமார் 119 மில்லியன் ரூபாவும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 50 திட்டங்களுக்காக சுமார் 69 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 58 திட்டங்களுக்காக சுமார் 69 மில்லியன் ரூபா நிதியும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 29 திட்டங்களுக்காக சுமார் 35 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவிக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!