பிரித்தானியாவில் கருகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!

பிரித்தானியாவின் தெற்கு ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் சாலையோரம் மொத்தமாக எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Bridgnorth சாலையில் திங்களன்று அதிகாலையில் குறித்த பெண் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அல்லது கொன்ற பின்னர் எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே, இந்த விவகாரம் தொடர்பில் உறுதியான தகவல் வெளியிட முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதுக்குள் இருக்கலாம் என்றே தடயவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காணாமல் போன இளம் பெண் அல்லது பெண்மணி தொடர்பில் தகவல் அறிந்த எவரும் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!