சுதந்திர தினத்தன்று விவசாய தொழிலாளர்கள் செய்யவிருக்கும் செயல்: அதிர்ச்சியில் மத்திய அரசு!

நாளை கொண்டாட உள்ள 75ஆவது சுதந்திர தினத்தை, விவசாய தொழிலாளர்கள் சுதந்திர புரட்சி தினமாக கொண்டாட போவதாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததை அடுத்து போராட்டம் தொடர்கிறது. கடந்த குடியரசு தினத்தன்று டில்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அதில் சில சமூக விரோத கும்பல் ஊடுருவியதை அடுத்து பயங்கர கலவரம் வெடித்தது .

இந்நிலையில் நாளை 75 ஆவது சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடி ஏந்தி , ஊர்வலம் நடத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர் . இது குறித்து சம்யுக்த் கிசான் மோர்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை விவசாய தொழிலாளர்கள் சுதந்திர புரட்சி தினமாக கொண்டாட அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நாடு முழுதும் உள்ள விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், மாட்டு வண்டிகளில் மூவர்ண கொடி ஏந்தி ஊர்வலம் நடத்த உள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் தாலுகா, வட்டார அளவில் இந்த ஊர்வலங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!