புதிய சேவையை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே துறை: பயணிகள் மகிழ்ச்சி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதை ரத்து செய்யாமல் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, பயணிகளின் பெயர் டிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பயணம் செய்பவரின் பெயர் சேர்க்கப்படும்.

பயணி ஒரு அரசு ஊழியராக இருந்தால், அவர் தனது பணி நிமித்தமாக செல்கிறார் என்றால், அவர் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்.

திருமணத்திற்கு செல்லும் போது இதுபோன்ற சூழ்நிலை வந்தால், திருமண மற்றும் விருந்தின் அமைப்பாளர் தேவையான ஆவணங்களுடன் 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் . இந்த வசதியை நீங்கள் ஆன்லைனிலும் பெறலாம் .

பயணி தனது டிக்கெட்டை மற்றொரு நபருக்கு ஒரு முறை மட்டுமே மாற்றலாம் , அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்ட அந்த நபர் , வேறொரு நபருக்கு மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட்டை பிரிண்ட் எடுத்து அருகே உள்ள டிக்கெட் புக் செய்யும் கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்று டிக்கெட்டை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!