பட்டப்பகலில் இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற இளைஞன்: காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

இந்தியாவில் பட்டப்பகலில் 22 வயது இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் துடி துடிக்க குத்தி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் Guntur-வில் பட்டப்பகலில் 22 வயது மதிக்கத்தக்க 22 வயது இளம் பெண் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி மாநிலத்தையே உலுக்கி வருகிறது. குறித்த மாணவி அப்பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார்.

அப்போது இரு சக்கரவாகனத்தில் வரும் இளைஞர், இரு சக்கர வாகனத்தில் ஏறும் படி கூறுகிறார். அதற்கு இந்த பெண் மறுக்கவே, உடனே அவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கண்மூடித்தனமாக கழுத்து, வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து குத்துகிறான்.

இதில் அந்த பெண் இரத்த வெள்ளத்தில் அவனிடம் இருந்து தப்பிப்பதற்கு போராடுகிறது. அப்போது அருகில் இருக்கும் நபர்களும் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்.

இறுதியில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், ரம்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணும், கத்தி குத்து தாக்குதல் நடத்தியவனும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சிசிடிவி காட்ச்கிகள் கிடைத்ததால், அதன் அடிப்படையில் வைத்து அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால் எதற்காக இந்த கொடூர செயலை செய்தான் என்பது தொடர் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!