மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராகுல்: முகநூல் நிறுவனம் நோட்டீஸ்!

டில்லியில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தில், அந்த சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை தன், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராகுல்.’பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடிய ராகுலுக்கு, நம் நாட்டின் சட்டதிட்டங்கள் தெரியவில்லையே.

அவரது ஆலோசகர்களாவது இந்த பிரச்னையை சொல்லியிருக்கலாம்’ என, மற்ற கட்சியினர் முணுமுணுக்கின்றனர். ‘ராகுல் யார் பேச்சையும் கேட்பது கிடையாது. அவருக்கு அருகில் இருப்பவர்கள் விஷயம் தெரியாதவர்கள். இப்படி இருந்தால் சர்ச்சை வரத் தான் செய்யும்’ என, வேதனைப்படுகின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.

‘பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுவது, ‘போக்சோ’ சட்ட விதி மீறல்’ என கூறி, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், அந்த வீடியோ பதிவை உடனடியாக நீக்குமாறு, பேஸ்புக் நிறுவனம் ராகுலுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!