ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை: உலக மக்களை கண்கலங்க வைத்த சம்பவம்!

ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபூல் விமானநிலையத்தில் 7 மாத குழந்தை தனியாக தவிக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு, அங்கிருக்கும் பல சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக முக்கிய நகரான காபூலில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேறி, விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் குழந்தை ஒன்று தனியாக கிடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமானநிலையத்தில் கிடந்த பெற்றோர் காபுப் பிடி-5 என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!