புகைப்படத்தை வெளியிட்டு கனேடிய மக்களை எச்சரித்த போலீசார்!

ஏற்கனவே கனடா அளவிலான கைது வாரண்டில் தேடப்பட்டு வரும் ஒருவரை ஹாலிஃபாக்ஸ்-நோவா ஸ்கோடியாவில் உள்ள காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராயல் கனடிய மவுண்டட் பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்டின் ஜொடி (Justin Jody) எனும் Annapolis கவுண்ட்டியை சேர்ந்த 31 வயது கைதியை தேடிவருவதாக கூறியுள்ளனர்.

நோவா ஸ்கோடியாவில், ஏராளமான வீட்டை உடைத்து, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவரும் இவர், தொடர்ந்து பொலிஸிடமிருந்து தப்பிவருவதாக தெரிவித்தனர். அவ்வாறு ஒரு வீட்டை உடைத்து திருடும்போது, அங்கிருந்த துப்பாக்கிகளை கையில் எடுத்துச் சென்றுள்ளதாக எச்சரித்துள்ளனர்.

தற்போது, ஜஸ்டின் ஜொடி New Tusket மற்றும் Corberrie பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்த இருப்பதால், அப்பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜஸ்டின் ஜொடி, 5 அடி 10 அங்குலம் உயரமும், 195 பவுண்ட் எடையும், பிரவுன் நிற கண்கள் மற்றும் பிரவுன் தலைமுடியம் கொண்டிருப்பார்.

மேலும், GUB396 பதிவு எண் கொண்ட, 2011 மொடல் கிரே நிற Mercedes 250 கார் வைத்திருப்பதாகவும், அவர் Nova Scotia கவுன்டியின் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர்.

ஜஸ்டின் ஜொடியை பார்க்கும் எவரும் அவரை அணுகுவதைத் தவிர்க்கவும், உடனடியாக பொலிஸை அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவர் இருக்கும் இடம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!