அவசர விஷயங்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

இலங்கையில் கோவிட் நிலைமை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ‘அவசர’ விஷயங்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவசரகால விவகாரங்கள் மாத்திரம், திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

அவசர விஷயங்கள் தொடர்பான விசாரணைகள், நீதிமன்றத்தில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

இதன்போது அனைத்து சட்டத்தரணிகளும் கோவிட் பரவுவதை தடுக்க சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று முதல் எதிர்வரும் 31 வரை திட்டமிடப்பட்ட விசாரணைகளுக்காக புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!