ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார் சுகாதார அமைச்சர்

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி தற்போதைய ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் தொற்று பரவலை நாட்டை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலகின் அனைத்து நாடுகளும் இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா என்பது குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாளைய தினம் கூடும் ஜனாதிபதி தலைமையிலான குழு இது தொடர்பில் தீர்மானம் எட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!