புலிகளின் தலைவரை காப்பாற்றியது நாங்கள் தான்! – என்கிறார் சிவாஜிலிங்கம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவில் இருந்து நாமே மீட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு பாண்டி பஸாரில் பிடிப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரை சட்டத்தரணிகள் ஊடாக மீட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் – வல்வெட்டித்துறை நகரசபை சம்பவம்,ஜெனிவா விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருகை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும்,தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்கும் ,தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலும், அவற்றினை சிதைக்காமலும் செயற்படுமாறும் எம்.ஏ.சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு முன்னிலையில் இருக்கும் ஒரு தேசிய கட்சியை சிதைப்பதன் மூலம் சிங்கள எஜமானர்களுக்கும் ,சர்வதேச நிகழ்ச்சி நிரலிலும் சுமந்திரன் இயங்குகின்றமையை பகிரங்கமாக குற்றம்சாட்ட விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!