நாளை யாழ்ப்பாணம் வருகிறார் இந்திய வெளியுறவு செயலாளர்!

இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நாளை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பின் பேரில் இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த பயணம் நீண்டகால உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு செயலாளருடனான இருதரப்பு சந்திப்பை அடுத்து, இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!