2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.


இதேவேளை, அடுத்த வாரம்முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நான்காம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த திடமிப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!