அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: மாணவர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சில மணிநேரங்களுக்கு முன் நடந்த சரமாரி துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸ் விசாரணையில் இறங்கியுள்ளது. டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளியில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடந்தது.

தெற்கு வாட்சன் சாலையின் 7000 தொகுதியில் அமைந்துள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த பள்ளியை மான்ஸ்ஃபீல்ட் சுயாதீன பள்ளி மாவட்டம் (MISD) இயக்குகிறது. ஆர்லிங்டன் உதவி பொலிஸ் தலைவர் கெவின் கோல்பியே (Kevin Kolbye) கூறுகையில், வகுப்பறையில் நடந்த சண்டையின் போது துப்பாக்கி சூடு நடந்தது என்று கூறினார்.

பிறகு வெளிவந்த தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில் 3 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். சந்தேக நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், பெற்றோர்கள் 151 மான்ஸ்ஃபீல்ட் வெப் சாலையில் அமைந்துள்ள மாணவர் சத்துணவு மையத்தில் கூடிவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அதன்பிறகு, உயர்நிலைப் பள்ளியில் இருந்து இந்த இடத்திற்கு மாணவர்களைக் கொண்டு செல்ல மாவட்ட வேலை செய்யும் என்று மான்ஸ்ஃபீல்ட் ISD அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!